Temples

Sports

Astrology

» » தங்க சூரிய பிரபைவாகனத்தில் அண்ணாமலையார் உலா!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப, இரண்டாம் நாள் திருவிழாவில், நேற்று காலை, விநாயகர் மற்றும் சமேத அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன் தங்க சூரிய பிரபை வாகனத்திலும், இரவு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், சமேத முருகர், வள்ளி, தெய்வாணை, சமேத அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், பராசக்தி, மற்றும் சண்டிகேஸ்வரர், வெள்ளி விமான வாகனத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தீப திருவிழாவை முன்னிட்டு, நேற்று, திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், அரசு பல்துறை பணி விளக்க கண்காட்சி துவக்கப்பட்டது. கண்காட்சியை, அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி துவக்கி வைத்தார்.கண்காட்சி, வரும், 5ம் தேதி வரை நடக்கிறது.

«
Next
Newer Post
»
Previous
Older Post