மதுரையில் ஒரே இடத்தில் சிக்கின 11 குண்டுகள்...
Posted by: Unknown Posted date: 10:18 AM / comment : 0
மதுரையில் ஒரே இடத்தில் சிக்கின 11 குண்டுகள்...சதி? பயங்கரவாதிகள் ஒத்திகையா என விசாரணை
மதுரை அண்ணாநகரில், குப்பை தொட்டியில் இருந்து நேற்று, 11 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதன் பின்னணியில் பயங்கரவாதிகள் உள்ளனரா என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மதுரை நகரில், பல இடங்களில் வெடிகுண்டுகளை வைக்க, பயங்கரவாதிகள் ஒத்திகை பார்த்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள நிலையில், சில ஆண்டுகளாகவே மதுரை நகரிலும், புறநகரிலும் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இதில் சில வெடிக்கவும் செய்தன. இதன் பின்னணியில் பயங்கரவாதிகள் சிலர் இருந்தது தெரிந்தது. ஆனாலும் அதிகாரப்பூர்வமாக போலீஸ் தரப்பில் குற்றவாளிகள் குறித்த விவரம் தெரிவிக்கப்படவில்லை.
அதிர்ச்சி:
இந்நிலையில், நேற்று மதுரையில், 11 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டது, மக்களை மட்டுமல்ல, போலீசாரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
மதுரை அண்ணாநகர் கிழக்கு முதல் தெருவில், கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் அருகில் மாநகராட்சி குப்பைத்தொட்டி உள்ளது. நேற்று மதியம், 3:30 மணிக்கு, அப்பகுதியைச் சேர்ந்த மாநகராட்சி துப்புரவு தொழிலாளி சந்திரா என்பவர், குப்பை கொட்ட வந்தார்.
அப்போது தொட்டிக்குள் சிவப்பு நிற ஸ்கூல் பேக் போன்ற பை இருந்தது. அதை ஆர்வத்துடன் பிரித்தபோது உமி கொட்டியது. அதனுள் வெள்ளை கயிறு, மஞ்சள், சிவப்பு நிற 'டேப்' சுற்றப்பட்ட உருண்டைகள் இருந்தன. பயந்து அப்படியே போட்டுவிட்டு சந்திரா நின்றபோது, ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு தடுப்புப்பிரிவு போலீசார் மூவர் அங்கு வந்தனர்.சந்திராவிடம், 'ஏதாச்சும் பார்த்தீயம்மா' என கேட்க, பை விவரத்தை கூறினார்.
அதை போலீசார் சோதனையிட்ட போது, வெள்ளை நிற நுாலால் சுற்றப்பட்ட இரு நாட்டு வெடிகுண்டுகள், மஞ்சள் நிற 'டேப்' சுற்றப்பட்ட நான்கு குண்டுகள், சிவப்பு நிற 'டேப்' சுற்றப்பட்ட குண்டுகள் என மொத்தம், 11 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன.அவற்றை பாதுகாப்பாக வைக்க உடனடியாக வண்டியூர் கண்மாய்க்கு எடுத்துச் செல்லப்பட்டன. துணை கமிஷனர் சாமந்த் ரோகன் ராஜேந்திரா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
ரவுடிகளுக்கு தொடர்பு:
முதற்கட்ட விசாரணையில், பிரபல ரவுடி அப்பள ராஜாவின் கூட்டாளி மதுரை இஸ்மாயில்புரம் கீரி மணி என்ற மணிமாறன் என்பவரால் இந்த குண்டுகள், குப்பைத்தொட்டியில் போட்டுஇருப்பது தெரியவந்தது.
ஆயுதங்களுடன் கைது:
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:அப்பள ராஜா, வழக்கு ஒன்றில் சிறையில் உள்ளார். இவரது கூட்டாளி மதுரையைச் சேர்ந்த பிரவீன், சில நாட்களுக்கு முன் சென்னை போலீசாரால் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டார். விசாரணையில், வரிச்சியூர் செல்வம் கேட்டதன்பேரில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து, கூட்டாளி மணிமாறன் மூலம் மதுரைக்கு கொடுத்து அனுப்பியதாகதெரிவித்தார். இதைதொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். மணிமாறன் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்.
இதனால் பயந்த அவர், குப்பைத்தொட்டிக்குள் வெடிகுண்டுகளை போட்டுவிட்டு போலீசிற்கு போனில் தகவல் தெரிவித்தார். இதன் அடிப்படையிலேயே அவை கண்டெடுக்கப்பட்டன.இதன் பின்னணியில் வரிச்சியூர் செல்வம் உள்ளாரா என தெரியவில்லை. அவருக்கும், பெத்தானியாபுரம் 'பெருசு' அழகர் என்பவருக்கும் கோவில் விழா தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இதன் அடிப்படையில் வெடிகுண்டுகளை கேட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மணிமாறன், வரிச்சியூர் செல்வத்திடம் விசாரித்த பிறகுதான் முழு விவரம் தெரியவரும். அவர்கள் தலைமறைவாக உள்ளனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
'டம்மி பீஸ்':
இதற்கிடையே, கண்டெடுக்கப்பட்டவை நாட்டு வெடிகுண்டுகள் அல்ல. அது தீபாவளிக்கு வெடிக்கும் வெங்காய வெடி போன்றவைஎன, போலீசார் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், ''எறிந்தால் வெடிக்கும் வகையில் கரிமருந்து, திரி மற்றும் கூழாங்கற்களை கொண்டு அவை தயாரிக்கப்பட்டு உள்ளன. இது உயிர்சேதத்தை ஏற்படுத்தாது. இது வெறும் 'டம்மி பீஸ்' என்றனர். இதை போலீஸ் கமிஷனர் அலுவலகமும் உறுதி செய்தது.
மதுரையில் இதுவரை குண்டுகள்...
* 2011 ஏப்., 30ல் மாட்டுத்தாவணி டாஸ்மாக் கடையில் பேட்டரி குண்டு வெடித்தது. செப்., 30ல் புதுார் பஸ் டெப்போவில் டைம் பாம் கண்டெடுக்கப்பட்டது.* அக்., 28ல் திருமங்கலம் ஆலம்பட்டி தரைபாலத்தின் கீழ் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி வரவிருந்த பாதையில் சக்திவாய்ந்த பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. டிச., 7ல் திருவாதவூர் பஸ்சில் டைம்பாம் கண்டெடுக்கப்பட்டது.*2012ல் மே 1ம் தேதி, அண்ணாநகர் ராமர் கோவில் வெளியே சைக்கிள் பாக்சில் டைம்பாம் வெடித்தது.*ஆக., 4ல் தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உமர்பாரூக் என்பவருக்கு டைம்பாம் பார்சல் வந்தது.* நவ., 2ல் திருப்பரங்குன்றம் மலையில் டைம்பாம் உதிரிபாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.* 2013 டிச., 5ல், அனுப்பானடி ரோட்டில் பெட்ரோல் குண்டு வீசி முத்துவிஜயன் என்பவர் கொல்லப்பட்டார்.
இந்தாண்டு பிப்., 11ல், உத்தங்குடி தனியார் வணிகவளாகத்தில் இரும்பு பைப் குண்டு, கண்டெடுக்கப்பட்டது.மார்ச் 14ல், நெல்பேட்டை சுங்கம்பள்ளிவாசல் அருகே குண்டுவெடித்தது.அந்த வரிசையில் தற்போது 11 நாட்டு வெடிகுண்டுகள் சேர்ந்து உள்ளன.

www.Nanthi.com
ICC WORLD CUP 2015
Popular Posts
-
இயக்குனர் பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கி வெளிவர இருக்கும் திரைப்படம் ‘பிசாசு’. இறந்துவிட்ட ஒரு பெண்ணின் ஆவி பலரையும் பழிவாங்குவதுதான் கதை....
-
மதுரையில் ஒரே இடத்தில் சிக்கின 11 குண்டுகள்...சதி? பயங்கரவாதிகள் ஒத்திகையா என விசாரணை மதுரை அண்ணாநகரில், குப்பை தொட்டியில் இருந்து நேற்று, 1...
-
திரையுலகில் அமைதிக்கு பெயர் போன நடிகர்கள் லிஸ்டில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவ்வளவு அமைதியான ஒருவருக்கா பிரச்சனை ஏற்படவேண்டும் என ‘உச்’ கொட...
-
பாஜக வின் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் திருக்குறளை இந்தியா முழுவதும் அறிந்திட செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். உத்திரகாண்ட...