சினிமா நடிகருக்கு சினிமா பாணியில் கொலை மிரட்டல்!
Posted by: Unknown Posted date: 1:05 AM / comment : 0
திரையுலகில் அமைதிக்கு பெயர் போன நடிகர்கள் லிஸ்டில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவ்வளவு அமைதியான ஒருவருக்கா பிரச்சனை ஏற்படவேண்டும் என ‘உச்’ கொட்டுகிறது கோடம்பாக்கம். தொடர் வெற்றிகளால் விஜய் சேதுபதி அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகிக்கொண்டிருந்த காலம் அது. ஸ்டூடியோ 9 தயாரிப்பு நிறுவனத்தின் R.K.சுரேஷ் தயாரிப்பில் வசந்தகுமாரன் படத்திலும் கமிட் ஆனார்.
நடிகர்-தயாரிப்பாளர் என்பதையும் மீறி இருவரும் நெருக்கமான நண்பர்களாக மாறிவிட்டதால் மற்ற படங்களில் நடித்துக்கொடுத்துவிட்டு உன் படத்தில் நடித்துக்கொடுக்கிறேன் என்று கூறியிருக்கிறார் விஜய்சேதுபதி. அப்போது அதற்கு ஒப்புக்கொண்டார் சுரேஷ். பின்னாளில் சுரேஷுக்கும் விஜய் சேதுபதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் என் படத்தில் முதலில் நடித்துக்கொடு, இல்லையெனில் பணத்தை வட்டியோடு சேர்த்து 2 கோடி கொடு என சட்டையை பிடிக்காத குறையாக கேட்டிருக்கிறார் சுரேஷ். என்னால் உன் படத்தில் நடிக்க முடியாது, நீ சம்பளமாக கொடுத்த 9 லட்சத்திற்கான வட்டி மட்டும் தான் கொடுப்பேன் என விஜய் சேதுபதி சொல்லிவிட கருத்துவேறுபாடு சண்டையாக மாறிவிட்டது.
உன்னை ஆள் வெச்சு அடிப்பேன். உன்னை கொன்னுடுவேன். என் கூட மோதி நீ எப்படி உயிரோட இருக்கன்னு பாக்குறேன்’ என சுரேஷ் பயமுறுத்த, தொடர்ந்து ஃபோனில் மிரட்டல்களும் வந்திருக்கின்றன. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக விஜய் சேதுபதி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்ததோடு, ”இது போன்ற மிரட்டல்கள் இனியும் தொடர்ந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன்” என்றும் அறிக்கை ஒன்ற வெளியிட்டுள்ளார். அதே சமயத்தில் தயாரிப்பாளர் சுரேஷ் பத்திரிக்கையாளர்களிடம் “எனக்கும் விஜய் சேதுபதிக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் எப்போது வந்து படம் நடித்துக்கொடுத்தாலும் எனக்கு ஓகே தான்” என்று கூறியிருக்கிறார்.

www.Nanthi.com
ICC WORLD CUP 2015
Popular Posts
-
இயக்குனர் பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கி வெளிவர இருக்கும் திரைப்படம் ‘பிசாசு’. இறந்துவிட்ட ஒரு பெண்ணின் ஆவி பலரையும் பழிவாங்குவதுதான் கதை....
-
மதுரையில் ஒரே இடத்தில் சிக்கின 11 குண்டுகள்...சதி? பயங்கரவாதிகள் ஒத்திகையா என விசாரணை மதுரை அண்ணாநகரில், குப்பை தொட்டியில் இருந்து நேற்று, 1...
-
திரையுலகில் அமைதிக்கு பெயர் போன நடிகர்கள் லிஸ்டில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவ்வளவு அமைதியான ஒருவருக்கா பிரச்சனை ஏற்படவேண்டும் என ‘உச்’ கொட...
-
பாஜக வின் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் திருக்குறளை இந்தியா முழுவதும் அறிந்திட செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். உத்திரகாண்ட...