Temples

Sports

Astrology

» » தமிழ் அன்னைக்கு முதல் வணக்கம்... தமிழில் முழங்கிய தருண் விஜய் !

பாஜக வின் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் திருக்குறளை இந்தியா முழுவதும்  அறிந்திட செய்ய  வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.
உத்திரகாண்ட் மாநில பாஜக வின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள தருண் விஜய் இன்று அவையில் பேசினார்.அப்போது அவர், "அன்னை தமிழுக்கு முதல் வணக்கம்..!" என்று தமிழ் மொழியில் கூறி அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.

தொடர்ந்து பேசிய தருண் விஜய் எம்.பி.  `அகர முதல எழுத் தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு` என்ற திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை  மேற்கோள் காட்டி பேசினார்.
மேலும் திருவள்ளுவரின் பிறந்த நாளை மத்திய அரசு சார்பில் கொண்டாட வேண்டும் என்றும், திருக்குறளை இந்தியா முழுவதும் அறிந்திட செய்ய வேண்டும் என்றும்  வலியுறுத்தினார்.

வடமாநில எம்பி ஒருவர் தமிழின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பேசிவருவது தமிழ் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மாதம் கவிஞர் வைரமுத்துவின் வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில், தமிழுக்காக குரல் கொடுத்து வருவதற்காக தருண் விஜய் எம்பி க்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

«
Next
Newer Post
»
Previous
Older Post