Temples

Sports

Astrology

» » ஹியுஸ் மரணம் எப்படி * என்ன சொல்கிறார் டாக்டர்

‘‘மிகவும் அரிதான விதத்தில், ஹியுஸ் கழுத்து பகுதியில் பந்து தாக்கியதால், அதிகமான ரத்தக்கசிவு ஏற்பட்டு மரணம் அடைந்தார்,’’ என, டாக்டர் பீட்டர் புருக்னர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் நடக்கும் முதல் தர போட்டி ‘ஷெபீல்டு ஷீல்டு’ தொடர். இதில் நியூ சவுத் வேல்ஸ் வேகப்பந்து வீச்சாளர்  சியான் அபாட் வீசிய ‘பவுன்சர்’, தெற்கு ஆஸ்­தி­­ரே­லிய வீரர் பிலிப் ஹியுஸ், 25, தலை­யில் பலமாக தாக்கியது. 
உடனடியாக நிலை குலைந்த இவர், நினைவு இழந்து (கோமா) கீழே சரிந்தார். செயின்ட் வின்சன்ட் மருத்துவமனைக்கு கொண்டு செல்­லப்­பட்ட இவ­ருக்கு, தலையில் ‘ஆப்­ப­ரே­ஷன்’ செய்யப்­பட்­டது. மூளைக்கு ஏற்படும் அதிர்ச்சியை தடுக்கும் வகையில், தொடர்ந்து ‘கோமா’ நிலை­யில் வைக்­கப்பட்­டி­ருந்தார்.
48 மணி நேரத்துக்குப் பின் தான் எதுவும் சொல்ல முடியும் என, டாக்டர்கள் தெரிவித்தனர். மூளையில் தொடர்ந்து ரத்தக் கசிவு இருந்த நிலையில், மருத்துவ கருவிகள் உதவியுடன் தாக்குப்பிடித்து வந்தார். ஆனால், இவரது உடல் நிலையில் எவ்வித முன்­னேற்­றமும் ஏற்­படவில்லை.
சிகிச்சை பலன் அளிக்காத நிலையில், நினைவு திரும்பாமலேயே, ஹியுஸ் மரணம் அடைந்தார்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி டாக்டர் பீட்டர் புருக்னர் கூறுகையில்,‘‘ஹியுஸ் மரணச் செய்தியை அறிவிப்பது சோகமாக உள்ளது. மிகவும் அரிதான விதத்தில், இவரது கழுத்து பகுதியில் பந்து தாக்கியுள்ளது. இதில், தமனியில் பிளவு ஏற்பட, மூளையில் அதிகமான ரத்தக் கசிவு ஏற்பட்டு மரணத்தை சந்தித்துள்ளார். கோமா நிலையில் வைக்கப்பட்டிருந்த இவருக்கு, கடைசி வரை நினைவு திரும்பவில்லை. இறக்கும் முன் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உடன் இருந்தனர்,’ என்றார்.

«
Next
Newer Post
»
Previous
Older Post