Temples

Sports

Astrology

» » ஜெ. மீதான வருமான வரி வழக்கு வாபஸ் ஆகிறது!

வருமான வரி வழக்கில், ஜெயலலிதாவின் சமரச மனுவை வருமானவரித்துறை ஏற்றுக்கொண்டுள்ளதை அடுத்து அந்த வழக்கு வாபஸ் ஆகிறது.

கடந்த 92, 93 மற்றும் 94-95ஆம் ஆண்டுகான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி, ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, ஜெயா பப்ளிகேஷன் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் மீது வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு சென்னை, எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், வருமான வரி கட்டதாததற்கு அபராதத் தொகையும் சேர்த்து கட்டி விடுவதாகக் கூறி, ஜெயலலிதா தரப்பில் சமரச மனு ஒன்று வருமான வரித்துறையில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஜெயலலிதா சார்பில் அபராதத் தொகையும் செலுத்தப்பட்டது.

இதையடுத்து, ஜெயலலிதாவின் சமரச மனுவை வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்மூலம் கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு வாபஸ் ஆகிறது.

«
Next
Newer Post
»
Previous
Older Post