Temples

Sports

Astrology

» » ஜெ. படம் பிரச்னையால் கடலூர் நகராட்சி கூட்டத்தில் கைகலப்பு!

ஜெயலலிதா படத்தை அகற்ற கோருவது தொடர்பாக தி.மு.க., அதிமுக கவுன்சிலர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கடலூர்  நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 
கடலூர் நகராட்சியில் மாதந்திர நகரமன்ற கூட்டம், நகரமன்ற தலைவர் குமரன் தலைமையில் இன்று நடைபெற்றது. அப்போது, நகரமன்ற கூட்ட அரங்கில் வைத்திருந்த ஜெயலலிதா படத்தை அகற்றவேண்டும் என்று 3வது வார்டு தி.மு.க கவுன்சிலர் நடராஜன் தலைமையில், தி.மு.க கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு அ.தி.மு.க கவுன்சிலர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
 "ஜெயலலிதா படத்தை அகற்றவில்லையென்றால், தி.மு.க தலைவர் கருணாநிதி படத்தையும் வைக்கவேண்டும்" என்று கூட்டத்திற்கு கருணாநிதி படத்தை கொண்டு வந்தனர் தி.மு.க கவுன்சிலர்கள்.
இதனால் அ.தி.மு.க கவுன்சிலர்களுக்கும், தி.மு.க கவுன்சிலர்களுக்குமிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த தள்ளுமுள்ளுவில் தி.மு.க கவுன்சிலர் நடராஜன் கையில் அடிவிழுந்தது.

இதை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தைவிட்டு வெளிநடப்பு செய்தனர். இதனிடையே தி.மு.க கவுன்சிலர் நடராஜன் உள்ளிட்ட இருவரை சஸ்பெண்ட் செய்தார் நகரமன்ற தலைவர் குமரன்.

«
Next
Newer Post
»
Previous
Older Post