Temples

Sports

Astrology

» » தமிழக அரசு இணையதளங்களிலிருந்து ஜெயலலிதா பெயர் நீக்கம்!

ஒருவழியாக தமிழக அரசின் இணையதள பக்கங்களிலிருந்து ஜெயலலிதா பெயர் நீக்கம் செய்யப்பட்டு, முதலமைச்சர் என்ற இடத்தில் ஓ.பன்னீர் செல்வம் பெயரும், படமும் இடம் பெற்றுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் அவர் இழந்தார்.
அதன்பின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்று கொண்டார். அவர் பதவி ஏற்று 1 மாதத்திற்கு மேல் ஆகியும் சட்டசபை இணையதளத்தில் ‘முதலமைச்சர் ஜெயலலிதா’ என்ற பெயர் நீக்கப்படாமலேயே இருந்தது. அவரது பெயரையும், புகைப்படத்தையும் அரசின் இணைய தள பக்கங்களிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தபோதிலும், அதனை சம்பந்தப்பட்ட துறையினர் கண்டுகொள்ளாமலேயே இருந்துவந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி காலியான தொகுதி என சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இதையடுத்து, நேற்று சட்டசபை செயலகத்தின் இணையதளத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜெயலலிதாவின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சர் என்ற இடத்தில், ஓ.பன்னீர் செல்வம் பெயர் இடம் பெற்றுள்ளது. இதேபோல் ஒவ்வொரு துறை இணையதளத்திலும் ஜெயலலிதாவின் பெயர் நீக்கப்பட்டு ஓ.பன்னீர் செல்வம் பெயர் இடம்பெற்று வருகிறது.

«
Next
Newer Post
»
Previous
Older Post