Temples

Sports

Astrology

» » மீண்டும் இணைந்து நடிக்கும் த்ரிஷா, சமந்தா

கௌதம் மேனன் இயக்கத்தில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. அந்த படத்தில் த்ரிஷா மெயின் ஹீரோயினாகவும் , சமந்தா படம் முடியும் தருவாயில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். 
தற்போது இவ்விருவரும் இணைந்து ’கோடி’ என்ற படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு ‘பாகுபாலி’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு குதிரை ஏற்றம் தெரியாத ஒரே காரணத்தால் சமந்தாவிற்குக் கிடைக்கவில்லை. 
இதனால் அந்த கதாபாத்திரத்தில் தமன்னா நடித்தார். மீண்டும் அந்த சூழ்நிலை உருவாகி விடக்கூடாது என்பதற்காக , 'கோடி' படத்துக்காக  குதிரை ஏற்றம் பயிற்சிபெறப் போகிறாராம் சமந்தா.
இது குறித்த செய்தியை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ நான் குதிரை சவாரி பழகப் போகிறேன்’ என்று ட்விட் செய்திருந்தார்.
இதற்கு த்ரிஷா ‘வாழ்த்துகள், இது ஒரு புது அனுபவமாக இருக்கும்’ என்று கூறியிருக்கிறார். 

«
Next
Newer Post
»
Previous
Older Post