பூஜை
Posted by: Unknown Posted date: 4:07 AM / comment : 0
நடிகர்
:
விஷால், சத்யராஜ்,
நடிகை
:
ஸ்ருதிஹாசன், ஐஸ்வர்யா,சித்தாரா,
கவுசல்யா
இயக்குனர்
:
ஹரி
இசை
:
யுவன் சங்கர் ராஜா
சிறிய கருத்து வேறுபாடு காரணமாக தாய் ராதிகாவை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார் விஷால். பின்னர் அவினாசி மார்க்கெட்டில் வியாபாரிகளுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலில் ஈடுபடுகிறார். அப்போது, வடமாநில இளைஞர்களை கூலிப்படையாக வைத்து கொலைகளை செய்து வரும் முகேஷ் திவாரி ஆட்களுக்கும் விஷாலுக்கும் மோதல் ஏற்படுகிறது.
கேரளாவில் எம்.பி.யை பணத்துக்காக கூலிப்படைகளை ஏவி முகேஷ்திவாரி கொல்கிறார். கோவை உயர் போலீஸ் அதிகாரி சத்யராஜையும் தீர்த்துக்கட்ட வருகிறார்கள். அவர்களை விஷால், துவைத்து எடுக்கிறார். இதற்கிடையே சுருதிஹாசனை ஆழமாக காதலிக்கிறார். ஆனால் அவர் விஷாலை அலட்சியப்படுத்துகிறார். பின்னர் குடும்ப பின்னணியை அறிந்ததும் நேசிக்கிறார்.
மிகப்பெரிய தொழில் நிறுவனமான கோவை குரூப்ஸ் பங்குதாரரான ராதிகாவின் குடும்பச்சொத்தை அபகரிக்க முகேஷ் திவாரி முயற்சி செய்கிறார். விஷாலின் சித்தப்பா ஜெயப்பிரகாசையும் அடித்து அவமானப்படுத்துகிறார். இழந்த பெருமையை நிலைநாட்ட மகனை அழைக்கிறார் ராதிகா.
தாயின் ஆணைப்படி களம் இறங்கும் விஷால் பொள்ளாச்சி ரோட்டில் பொது மக்கள் முன்னிலையில் முகேஷ் திவாரியை அடித்து அவமானப்படுத்துகிறார். இதனால் வில்லன் ஆவேசமாக ‘விஷால் எரிமலையாகிறார்’. முடிவு என்ன? என்பது, அனல் பறக்கும் மீதிக்கதை.
ஆக்ஷன், அதிரடி என படம் முழுவதும் சிலிர்க்க வைக்கிறார் விஷால். கூலிப்படையினருடன் ஏற்படும் மோதலில் காட்டும் ஆவேசம் ரசிகர்களுக்கு துள்ளல். சுருதிஹாசனுடன் மோதுவதும் பின்னர் குலாவுவதும் கிளுகிளுப்பு. குடும்ப பாசம், நட்பு என உணர்ச்சியையும் கொட்டுகிறார்.
சுருதிஹாசன் கவர்ச்சியில் தாராளம் காட்டி அழகு தேவதையாக ஜொலிக்கிறார். நடிப்பிலும், பாடல் காட்சிகளிலும் பளிச்சிடுகிறார்.
ராதிகா அம்மா வேடத்தில் அசத்துகிறார். போலீஸ் அதிகாரி ‘மொட்டை’ சத்தியராஜ் சிறிது நேரம் வந்தாலும் நினைக்க வைக்கிறார். வில்லன் முகேஷ் திவாரி, மூர்க்க திவாரியாக வந்து திகிலூட்டுகிறார். விஷாலுடன் அமர்க்களம் செய்யும் சூரி, பிளாக் பாண்டி, இமான் அன்னாச்சி கூட்டணி கலகலப்பு. தலைவாசல் விஜய், ஜெயப்பிரகாஷ், கவுசல்யா, ரேணுகா, மனோபாலா அனைவரும் கதைக்கு பொருந்துகிறார்கள்.
இயக்குனர் ஹரி பூஜைக்கு தேவையான அனைத்தையும் கொடுத்து காட்சிக்கு காட்சி விறுவிறுப்பு ஏற்றி இருக்கிறார். கூலிப்படை திகிலுடன் விஷாலின் ஆக்ஷனையும் புகுத்தி ரசிகர்களின் கவனத்தை விலக விடாமல் செய்யும் வித்தையில் வெற்றி பெற்றிருக்கிறார்.
இசையில் யுவன் சங்கர் ராஜா முத்திரை பதித்திருக்கிறார். பிரியன் கேமராவை சுழற்றி இருக்கும் விதம் அவர் மீது பிரியம் ஏற்பட வைக்கிறது. வன்முறை காட்சிகளை கொஞ்சம் குறைத்திருக்கலாம். நடத்திய ‘பூஜை’க்கு கிடைத்திருப்பது... நல்ல பலன்...
www.Nanthi.com
ICC WORLD CUP 2015
Popular Posts
-
இயக்குனர் பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கி வெளிவர இருக்கும் திரைப்படம் ‘பிசாசு’. இறந்துவிட்ட ஒரு பெண்ணின் ஆவி பலரையும் பழிவாங்குவதுதான் கதை....
-
மதுரையில் ஒரே இடத்தில் சிக்கின 11 குண்டுகள்...சதி? பயங்கரவாதிகள் ஒத்திகையா என விசாரணை மதுரை அண்ணாநகரில், குப்பை தொட்டியில் இருந்து நேற்று, 1...
-
திரையுலகில் அமைதிக்கு பெயர் போன நடிகர்கள் லிஸ்டில் விஜய் சேதுபதியும் ஒருவர். இவ்வளவு அமைதியான ஒருவருக்கா பிரச்சனை ஏற்படவேண்டும் என ‘உச்’ கொட...
-
பாஜக வின் மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் திருக்குறளை இந்தியா முழுவதும் அறிந்திட செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். உத்திரகாண்ட...