Temples

Sports

Astrology

» » கிளாமரா அப்டினா என்ன? ஆச்சர்யப்பட வைத்த ஸ்ருதி!

விஷால், ஸ்ருதி இணைந்து நடித்துள்ள பூஜை திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்த்திரையுலகின் பக்கம் தலைகாட்டும் ஸ்ருதியிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொன்ன ஸ்ருதி ஹைலைட்டாக சொன்னது ‘விஷால்’ , ‘கிளாமர்’ பற்றி தான்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஸ்ருதி “ நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் தமிழ்த்திரையுலகில் நடிக்க காரணமான விஷாலுக்கு நான் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு தமிழில் பல வாய்ப்புகள் வந்தாலும், தெலுங்கில் நான் பிஸியாக இருந்ததால் நடிக்கமுடியவில்லை. பூஜை படவாய்ப்பு வந்த போது மற்ற படங்கள் இல்லாததால் நடிக்கமுடிந்தது. மற்றபடி தமிழ்ப்பட வாய்ப்புகளை வேண்டுமென்றே நிராகரித்தேன் என்பதில் உண்மையல்ல. பல கலாச்சாரங்கள் கொண்ட குடும்பத்திலிருந்து வந்த நான் ஒரே திரையுலகத்தில் நீடிக்கவும் விரும்பவில்லை, எந்த திரையுலகத்தையும் நிராகரிக்கவும் விரும்பவில்லை. தெலுங்கில் மட்டும் கிளாமராக நடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது. கிளாமர் என்று சொல்கிறவர்களிடம் முதலில் கிளாமர் என்றால் என்ன என்று கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும்” என்று கூறினார்.

«
Next
Newer Post
»
Previous
Older Post