Temples

Sports

Astrology

» » நான் யாருக்கும் பயப்படவில்லை - அரசியல் பற்றி ரஜினி!

எந்தவித பிரம்மாண்ட ஏற்பாடுகளும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவின் திரைப் பிரபலங்களின் முன்னிலையில் வெளியிடப்பட்டது லிங்கா திரைப்படத்தின் இசைவெளியீடு. ஒரு சினிமா விழாவாக துவங்கிய இந்த இசைவிழா முழுக்க பேசப்பட்டது அரசியல் என்றால் அது மிகையாகாது.இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், சேரன், அமீர், வைரமுத்து உட்பட பலரும் ‘ரஜினி சார் அரசியலுக்கு வரணும்’ என்று சொல்லி அதற்கான காரணங்களையும் விளக்கினர்.

வைரமுத்துவோ ‘ரஜினியை வலுக்கட்டாயமாக அரசியலுக்குள் இழுக்கமுடியாது. ஒருவேளை அவர் வர நினைத்துவிட்டாலும் அவரது வெற்றியை யாரும் தடுக்கமுடியாது’ என்று பேசி ரஜினியையே சிரிக்கவைத்தார். சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பேசிமுடித்த பின், அவர்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய ரஜினி “நான் அரசியலுக்கு வருவது பற்றிய பேச்சு எழுந்தபோதெல்லாம் மேலே கையை காட்டிவிட்டு அமைதியாக இருந்துவிடுவேன். 

இந்தமுறையும் அதேமாதிரி செய்தால் போயா என்று போய்விடுவீர்கள். அரசியல் என்பது மிகவும் ஆழமானது. ஒருமுறை சென்றால் மீண்டும் திரும்பமுடியாத அளவுக்கு ஆபத்தானது. ஆனால் நான் யாருக்கும் பயந்துகொண்டு அரசியலுக்கு வராமல் இல்லை. என் மனதிற்கு பிடித்ததைத் தான் நான் செய்வேன். அரசியலுக்கு வரவேண்டும் என்று தோன்றினால் நான் வருவேன். அரசியல் பற்றி முடிவெடுக்க நான் அதிக காலம் எடுத்துக்கொண்டிருக்கிறேன் என்று எனக்கு தெரியும். ஆனால் ஒவ்வொன்றையும் செய்வதற்கு நேரம் வரவேண்டும். அந்த நேரம் வந்தால் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் நான் மக்கள் பணியில் ஈடுபடுவேன்” என்று கூறினார்.

«
Next
Newer Post
»
Previous
Older Post