Temples

Sports

Astrology

ஒரு அனேகன், ஒரு அனேகள் இருவரும் காதலிக்கிறார்கள் இதுதான் அனேகன்’ படம்.

கொஞ்சம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘எனக்குள் ஒருவன்’, ‘மஹதீரா’ என கலந்துகட்டி அடித்தால் ’அனேகன்’. முன் ஜென்மத்தில் இருந்து அடுத்த ஜென்மம் வரைக்கும் காதலர்களாவே சுற்றிக்கொண்டு இருக்கும் தனுஷ், அமைரா தஸ்தூர்; இவர்களுக்கு நடுவில் கடந்த கால வில்லன்கள், ஒரிஜினல் நிகழ்கால டெக்னாலஜி சார்ந்த வில்லன் .. அதற்கு நிகழ்கால தீர்வு என்ன என்பதே ‘அனேகன்’.
பொதுவாக கே.வி.ஆனந்த் படங்கள் என்றாலே, த்ரில்லர் பாக்கெட் நாவல் படித்த உணர்வு இருக்கும். அவருடைய ஃபேவரைட் எழுத்தாளர்கள் சுபாவை தமிழ் சினிமாவுக்குக் கூட்டுக்கொண்டு வந்த புண்ணியம் கே.வி.ஆனந்தையே சேரும். ’கனா கண்டேன்’, ’அயன்’, ’கோ’ மாதிரியான படங்களில் கமர்ஷியலும், த்ரில்லரும் பின்னி பிணைந்து ஓடும் அளவுக்குக் கொடுத்த கே.வி.ஆனந்துக்கு சறுக்கிய படம் ‘மாற்றான்’. கண்டிப்பாக அதை சரிகட்ட வேண்டிய நிலையில், இந்தப் படம் அதை ஈடுகட்டும்
கூடுதலாக ஆல் இந்தியா ஸ்டார் அட்ராசிட்டி உள்ள தனுஷ் கால்ஷீட் கிடைக்க, காதலை புது வெரைட்டியாக காட்ட முயற்சி செய்துள்ளார்கள். ஆனால், தமிழ் சினிமா ரசிகர்களிடம் தப்ப முடியுமா? மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் காதலர்களாகப் பிறந்து, பல்வேறு காரணங்களுக்காக உயிரைவிட்ட காதல் ஜோடி, நிகழ்காலத்தில் பல்வேறுத் தடைகளைத் தாண்டி எப்படி ஜெயித்தார்கள் என்பதை சொல்லும் அதே ’நெஞ்சம் மறப்பதில்லை’ ‘மஹதீரா’ கதை! ஆனால், அந்த ஒரிஜினல் வெர்ஷனோடு ஒப்பிடுகையில் இந்த படம் சற்றே ஏமாற்றம்தான்.
தனுஷ்... ஷ்ஷ்ஷ்ஷ்.... யப்பா இந்த பையனுக்குள்ள என்னமோ இருக்கு. தனுஷ் இன்ட்ரோவுக்கு பொண்ணுங்களே விசில் அடிக்கிறாங்க. மனுஷன் நான்கு கெட்டப்களிலும் ஒரு காட்டு காட்டியிருக்கிறார். அந்த காளி கேரக்டர் தாறுமாறு தக்காளி சோறு ரகம். 'டங்கா மாரி ஊதாரி' பாட்டுக்கு விசில் பறக்குது. ஐடி கம்பெனில சிஸ்டம் அட்மினா அவர் வேலை பார்த்தாலும், அந்த தெனாவெட்டு லுக்கு பக்கா மேன்லி. 'இப்பல்லாம் அஸ்வின் இந்தி பொண்ணுங்க கனவுலகூட எக்ஸ்க்ளூசிவ்வா வரான் தெரியுமா?’ இப்படி ஹீரோயின்கிட்ட அவர் பேசுறப்போ இப்போதிருக்கும் பசங்களுக்கு கொஞ்சம் கடுப்பாவும், பொறாமையுமா இருந்தாலும் ஃபேக்ட் ஃபேக்ட் ஃபேக்ட் ஜி தான்.
ஹீரோயின் அமைரா தஸ்தூர்... படம் பூரா உதட்டை குவிச்சு ஒரு முத்தம் அடிக்கையில் என்னா பொண்ணுடா இது... பசங்க மெர்ஸலாகுறாங்க. செம க்யூட்.. இந்த பக்கிய லெமுரியா கண்டத்துல ஏதும் கண்டெடுத்தீங்களா’னு கே.வி.ஆனந்த் கிட்ட கேக்கணும்.
இனி லவ்வர்ஸ் காயம்பட்டா மருந்து கட்டி கட்டு போட்டுக்க மாட்டாங்க. எச்சில் துப்பி காத்துல விட்டே சரி பண்ணிக்குவாங்க. அப்படி ஒரு லவ் படத்தில். பசங்க இன்னும் கொஞ்ச நாளைக்கு அமைரா தஸ்தூர் காய்ச்சல்ல சுத்துவாங்க.
என்னதான் இவர்கள் இருவரும் காதலில் கல்லா கட்டினாலும், இருவரையும் தாண்டி நிற்கிறார் ஹேண்ட்சம் ’நவரச நாயகன்’ கார்த்திக், ரொம்ப நாள் கழிச்சு, 'ஏ... ஐ ஆம் ஸ்டில் அலைவ்... என ’இவன தூக்கிட்டு வர மூணு பேரா’ என தனுஷை கிண்டலடிக்கும்போது 'அமிதாப்ப மிஞ்சுன தனுஷால இவர மிஞ்ச முடியலையே'ன்னு ஒரு கணம் தோணுது. 
பின்னணி மியூஸிக்ல பட்டையைக் கிளப்பி இருக்கிறாரு நம்ம ஹாரிஸ். அதுக்காக மனசாட்சியே இல்லாம மரியான் படத்து 'இன்னும் கொஞ்ச நேரம்...'  பாட்டையே அப்படியே சுட்டு 'ஆத்தாடி ஆத்தாடி...' னு ஒரு பாட்டு போட்டிருக்கீங்க பாருங்க. ஹாரிஸ் சார் உங்களை ரங்கூனுக்கு நாடு கடத்திடலாம்னு தோணுது.
கே.வி.ஆனந்த் படம் விஷுவல் ட்ரீட்டா இருக்கும்னு பச்சைக் குழந்தைக்குக்கூட தெரியும். படம் முழுக்க பளிச்னு இருக்கு ஓம் பிரகாஷோட சினிமோட்டோகிராபி. அதுலயும் அந்த ரங்கூன் போர்ஷன் செம அழகு. கம்போடியா, வியட்னாம், பொலிவியா, மலேசியானு தேடித்தேடி லொக்கேஷன்களை அள்ளி போட்ருக்காங்க. சில இடங்கள்ல கிராஃபிக்ஸ் கண்ணை உறுத்துது ஆனாலும் இந்தக் கதைக்கு ஓ.கே மன்னிச்சு விட்டுடலாம்னு தோணுது.
முதல் பாதியில ஜெட் வேகத்துல போகும் படம், இரண்டாம் பாதியில கொஞ்சம் நொண்டி அடிக்குது. ஏகப்பட்ட டீட்டெய்லை படு டீடெய்லா சொல்லி இருக்காங்க. அதுக்காக பயங்கரமா மெனக்கெட்டிருக்காங்க. ஆனா, அதெல்லாம் இப்படி ஒரு கதையினால மனசுல நிக்கலை. குறிப்பா பர்மா போர்ஷன் நுணுக்கமா எல்லா டிப்பார்ட்மென்ட்டும் சேர்ந்து வேலை பார்த்திருக்காங்க. ஆனா, அது படத்துக்கு பெருசா சப்போர்ட் பண்ணல என்பதே உண்மை. 
சரி ’அனேகன்’ படத்தை பார்க்கலாமா? தனுஷ்காக நிச்சயம் ஒருமுறை பார்க்கலாம். பசங்க அமைரா தஸ்தூர்க்காக பார்க்கலாம், சினிமா ரசிகர்கள் முக்கியமாக கார்த்திக்கின் எவர்யூத் லுக்குக்காகவும் ஆக்டிங்குக்காகவும்  பார்க்கலாம்.
மீனம்:
உங்கள் ராசிநாதன் குரு 5-லும் 11-ல் சூரியனும் புதனும், 12-ல் சுக்கிரனும் உலவுவதால் முக்கியஸ்தர்களின் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியங்கள் இப்போது நிறைவேறும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். ஆசிரியர்களும் ஆன்மிகவாதிகளும் வளர்ச்சி காண்பார்கள். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு ந்ல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளச் செலவு செய்வீர்கள்.
தந்தையால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் உண்டாகும். 12-ஆம் தேதி முதல் செவ்வாய் ஜன்ம ராசிக்கு மாறுவதும் சிறப்பாகாது. இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். தான, தர்மப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். 13-ஆம் தேதி முதல் சூரியன் 12-ஆமிடம் மாறுவதால் செலவுகள் கூடும். சிக்கனம் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. அரசியல் வாதிகள், அரசுப்பணியாளர்கள் ஆகியோர் தங்கள் கடமைகளைச் சரிவர ஆற்றிவருவதன் மூலம் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம்.
15-ஆம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். உடல்நலம் ஒருநாள் போல் மறுநாளிராது. சனி வக்கிர நிலையில் உலவும் நிலை அமைவதால் உழைப்பு அதிகரிக்கும். மனத்துக்குச் சலனத்தைத் தரும் சம்பவங்கள் நிகழும். எதிலும் அவஸ்ரீப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் விளையாட்டுகளில் ஈடுபடும்போதும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது.
உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: பிப்ரவரி 2, 5, 8, 9 (முற்பகல்), 15, 22, 23.
திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு..
எண்கள்: 1, 3, 5, 6, 9,
கும்பம்:
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 10-ல் சனியும், உலவுவதால் அந்தஸ்தும் புகழும் மதிப்பும் உயரும். எடுத்த காரியங்களில் வெற்றி காணச் சந்தர்ப்பம் கூடிவரும். கலைத்துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு வெற்றிகள் குவியும். மாதர்களது நிலை உயரும். பெற்றோரால் ஓரளவு அனுகூலம் ஏற்படும். கணவன் மனைவி உறவு நிலை சீராகவே இருந்துவரும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும். தொழில் முன்னேற்றத் திட்டங்கள் நிறைவேறச் சந்தர்ப்பம் கூடிவரும்.
12-ஆம் தேதி முதல் செவ்வாய் 2-ஆமிடம் மாறி, கேதுவுடன் கூடுவது சிறப்பாகாது. குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அதிகரிக்கும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. வீண் விவகாரங்களில் ஈடுபடலாகாது. 13-ஆம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதும் சிறப்பாகாது. வீண் செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். உடல் ஆரோக்கியமும் குறையும். மருத்துவச் செலவுகள் கூடும். உஷணாதிக்கம் கூடும். கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 15-ஆம் தேதி முதல் சுக்கிரன் 2-ஆமிடம் மாறுவதால் பண நடமாட்டம் அதிகமாகும்.
குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் உருவாகும். பல வழிகளில் வருவாய் வந்து சேரும். 15-ஆம் தேதி முதல் சனி வக்கிர நிலை பெறுவதால் தந்தை நலனில் கவனம் தேவை. புதன் 12-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் வியாபாரிகளுக்கு மாமூலான வளர்ச்சி பாதிக்காது. மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்தினால் வளர்ச்சி காணலாம். டெக்னாலஜி சம்பந்தமான கல்வி பயில்பவர்களுக்கு முன்னேற்றமான பாதை புலப்படும்.
அவிட்டம், சதயம் நட்சத்திரக்காரர்களுக்கு சுப பலன்கள் கூடும் மாதமிது.
அதிர்ஷ்டத் தேதிகள்: பிப்ரவரி 2, 5, 11, 15, 22, 23.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு.
மகரம்:
உங்கள் ராசிநாதன் சனி 11-ஆமிடத்தில் உலவுவது விசேடமாகும். சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரமும் சிறப்பாக இருப்பதால் உங்கள் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். பொருளாதார நிலை உயரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் வந்து சேரும். எதிரிகள் விலகிப் போவார்கள். பேச்சில் இனிமையும் கடுமையும் கலந்து காணப்படும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள்.
மாதர்களது நோக்கம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கை நிகழும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகமாகும். 12-ஆம் தேதி முதல் செவ்வாய் 3-ஆமிடம் மாறி, கேதுவுடன் கூடுவதால் அசாத்தியமான துணிச்சல் உண்டாகும். செயலில் வேகம் கூடும். காரியத்தில் வெற்றி கிட்டும். எதிரிகள் பயந்து ஒளிவார்கள். வழக்கிலும் விளையாட்டிலும் போட்டிகளிலும் வெற்றி கிடைக்கும். 13-ஆம் தேதி முதல் சூரியன் 2-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். பொருளாதாரப் பிரச்னை சிலருக்கு ஏற்படும். வீண்வம்பு கூடாது. கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.
15-ஆம் தேதி முதல் சுக்கிரன் 3-ஆமிடம் மாறுவதாலும், சனி வக்கிர நிலை பெறுவதாலும் செய்து வரும் தொழிலில் நல்ல மாற்றமும் ஏற்றமும் உண்டாகும். பிரச்னைகள் குறையும். நல்ல தகவல் வந்து சேரும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். மக்களால் அளவோடு நலம் ஏற்படும். தந்தை நலனில் அக்கறை தேவைப்படும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை.
திருவோணம், அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் கூடும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: பிப்ரவரி 2, 8, 9 (முற்பகல்), 11, 15, 22, 23.
திசைகள்: வடகிழக்கு, மேற்கு, வடமேற்கு, தென்கிழக்கு.
எண்கள்: 3, 6, 7, 8.
தனுசு:
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் செவ்வாயும் சுக்கிரனும் 8-ல் வக்கிர குருவும், 10-ல் ராகுவும்  உலவுவதால் குடும்பத்தில் குதூகலம் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். எதிர்ப்புக்கள் விலகும். துணிவோடும் தன்னம்பிக்கையோடும் எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். தந்தையால் அனுகூலம் உண்டாகும். பண நடமாட்டம் அதிகமாகும். கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இஒருப்பார்கள்.
போட்டிப் பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிட்டும். எதிரிகள் அட்ங்கிப் போவார்கள். கலைத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். கேது 4-லும் சனி 12-லும் உலவுவதால் , அலைச்சல் கூடும். தாய் நலனில் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னேற்றம் காணக் குறுக்கீடுகளும் தடைகளும் ஏற்படும். குடும்ப நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.
12-ஆம் தேதி முதல் செவ்வாய் 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. சொத்துக்கள் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும். சுகம் குறையும். 13-ஆம் தேதி முதல் சூரியன் 3-ஆமிடம் மாறுவதால் அரசு உதவி கிடைக்கும். தந்தை நலம் சீராகும். 15-ஆம் தேதி முதல் சுக்கிரன் 4-ஆமிடம் மாறுவதாலும் சனி வக்கிர நிலை பெறுவதாலும் சுகானுபவம் உண்டாகும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். வீண் செலவுகள் குறையத் தொடங்கும்.
மூல நட்சத்திரக்காரர்களுக்கு நற்பலன்கள் அதிகம் உண்டாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: பிப்ரவரி 5, 8, 9 (முற்பகல்), 11, 15, 22, 23.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடக்கு. .
எண்கள்: 4, 5, 6, 9.

விருச்சிகம்:
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும், 4-ல் சுக்கிரனும், 9-ல் குருவும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். நிர்வாகத்திறமை வெளிப்படும் நேரமிது. எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். அரசு உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளின் கொள்கைகளுக்கு வரவேற்பு கூடும். அரசுப்பணியாளர்களுக்குப் புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். முக்கியஸ்தர்களது தொடர்பு மூலம் பயன் உண்டாகும். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகமாகும்.
மாதர்களது நிலை உயரும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். அயல்நாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்களுக்கு ஆதாயம் கூடும். 12-ஆம் தேதி முதல் செவ்வாய் 5-ஆமிடம் மாறி செவ்வாயுடன் கூடுவதால் மக்கள் நலனில் கவனம் தேவைப்படும். வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். 13-ஆம் தேதி முதல் சூரியன் 4-ஆமிடம் மாறுவது சிறப்பாகாது. அலைச்சல் அதிகரிக்கும். உழைப்பும் கூடும். தொழிலில் சீரான வளர்ச்சி காணலாம்.
15-ஆம் தேதி முதல் சுக்கிரன் 5-ஆமிடம் மாறுவது சிறப்பாகும். சனி வக்கிரம் பெறுவது சிறப்பாகாது. கலைத்துறையினருக்கு சுபிட்சம் கூடும். வாழ்க்கைத்துணைவரால் அனுகூலம் உண்டாகும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்வீர்கள். உடல் நலனில் அக்கறை தேவை. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அளவோடு வளர்ச்சி தெரியவரும். ஜலப்பொருடிஅள் ஓரளவு லாபம் தரும்.
அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு சுபபலன்கள் அதிகமாகும்.
அதிர்ஷ்டத் தேதிகள்: பிப்ரவரி 2 (பிற்பகல்), 5, 8, 9 (முற்பகல்), 11, 15, 22, 23.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு. .
எண்கள்: 1, 3, 4, 6.
துலாம்:
உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் 5-ல் உலவுவது சிறப்பாகும். புதன், குரு, கேது ஆகியோரது சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். கலைத்துறை ஆக்கம் தரும். பெண்களுக்கு மன உற்சாகம் கூடும். புதிய ஆடை, அணிமணிகளும் அலங்காரப் பொருட்களும் சேரும். வியாபாரிகளுக்கு அளவோடு லாபம் கிடைத்துவரும். மாணவர்கள் படிப்பில் முழுக்கவனம் செலுத்தினால் வளர்ச்சி காணலாம். குடும்ப நலம் சீராக இருந்துவரும். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள்.
ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத்தெளிவு .பிறக்கும். பொருளாதார நிலை உயரும். 12-ஆம் தேதி முதல் செவ்வாய் 6-ஆமிடம் மாறுவதால் மனத்துணிவு கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். செயலில் வேகம் பிறக்கும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். 13-ஆம் தேதி முதல் சூரியன் 5-ஆமிடம் மாறுவதும் சிறப்பாகாது. மக்களால் மன அமைதி குறையும். அரசுப்பணிகளில் அதிக கவனம் தேவை. மறதியால் அவதி ஏற்படும்.
15-ஆம் தேதி முதல் சுக்கிரன் 6-ஆமிடம் மாறுவதும், சனி வக்கிர நிலை பெறுவதும் சிறப்பாகாது. உடல் நலனில் கவனம் தேவை. மதிப்பு குறையும். எதிர்பாராத செலவுகளும் இழப்புக்களும் ஏற்படும். 12-ல் ராகு உலவுவதால் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். கடன் வாங்க வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படும். கனவு தொல்லையால் தூக்கம் கெடும். வீண்வம்பு வேண்டாம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் சுமுகமாகப் பழகவும்.
சித்திரை, சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு அனுகூலமான மாதமிது.
அதிர்ஷ்டத் தேதிகள்: பிப்ரவரி 2, 5, 8, 9 (முற்பகல்), 11, 15, 22, 23.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு.
எண்கள்: 3, 5, 6, 7.